×

வீடுவீடாக துண்டுபிரசுரம் வழங்கி பொதுமக்கள் பயணமுறை குறித்த விழிப்புணர்வு கருத்துக்கணிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொதுமக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியை வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம், தமிழ்நாடு முதல்வரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுமம் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சென்னை பெருநகர பகுதியின் எதிர்கால போக்குவரத்தை வடிவமைக்க தயாரிக்கப்படும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக நீண்ட காலத்திற்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டமாகும். மக்களின் பயண நேரத்தையும், செலவையும் குறைக்கும் நம்பகமான மற்றும் வேகமான பொது போக்குவரத்தை வடிவமைக்கவும், பாதுகாப்பான சாலைகளை வடிவமைக்கவும், பொது மக்களின் பயண முறை மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்துக் கொள்ளவும் சிறந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கவும் மற்றும் அனைவருக்கும் ஏற்ற போக்குவரத்தை திட்டமிடவும் பொதுமக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு எடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதை நேற்று, சென்னை மெரினா கடற்கரை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக துண்டுபிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்தார். அடுத்து வரும் 25 ஆண்டுகால சென்னையின் பொது போக்குவரத்தை திட்டமிட இந்த கருத்துக்கணிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்சித் துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும சிறப்பு அதிகாரி ஜெயகுமார், ஐ.ஆர்.டி.எஸ்., சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) சுதாகர், சென்னை மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வீடுவீடாக துண்டுபிரசுரம் வழங்கி பொதுமக்கள் பயணமுறை குறித்த விழிப்புணர்வு கருத்துக்கணிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Chennai Integrated Metropolitan Transport Group ,Dinakaran ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்